உடைந்த வலைதளமானது எங்களுக்கு எரிச்சலூட்டும் அது ஒரு தொற்று நோய் போன்றது. அந்த வித்தியாசமான பிழைகள் என்னவென்று எமக்கு தெரியாது. எனவே பொது பிழையான HTTP பிழை பற்றிய ஒரு விளக்கம்
HTTP பிழை என்றால் என்ன?
நீங்கள் இணையத்தளம் ஒன்றையேஅல்லது இணையமுகவரி ஒன்றையே கிள்க்செய்யும்பற்சத்தில் அந்த வலையதளத்ததை உங்களுக்கு காண்ப்பிப்பதற்காக உலாவி(Browser) ஆனது எதாவது சேவையகத்ததை (Server) தேடும். உலாவியானது சேவையக்தை அடைந்தால் நீங்கள் எதிர்பார்த்த தளத்தை அது காண்பிக்கும். ஆனால் உலாவியானது சேவையகத்ததை அடையமுடியவில்லை என்றால் அது பிழைசெய்தியை காண்பிக்கும். இந்தசெய்தியானது உங்கள் கணினியில் உள்ள பிழை அல்லது நீங்கள் அடைய முயற்ச்சிக்கும் இணைய சேவையகத்தின் பிழையாக இருக்கும். பொதுவாக பிழைகளின் ஒரு அடிப்படை விளக்கத்தை அந்த பிழை செய்தி காண்பிக்கும் ஆனால் அந்த விளக்கங்கள் தெளிவற்றதாக இருக்கும். பொதுவான HTTP பிழைகளும் அதைபற்றிய ஒரு விளக்கமும்.
-
HTTP 500 பிழை
இப் பிழையானது வலை சேவையகத்தின்சிக்கல்களை கொண்டுள்ளது. இது மிகவும் தெளிவற்றது, ஆனால் இந்த பிழை செய்தியை நீங்கள் அடைய முயற்ச்சிக்கும் இணைய சேவையகத்தின் ஒரு பிழையாகும். இப்பிழைகளானது சேவையகத்தின் கட்டமைப்பு (Configuration) தரவுகளின் தவறாக இருக்கலாம் அல்லது சேவையத்திற்கு அதிகமான கோரிக்ககைகளின் வருகையாகவும் இருக்கலாம்.
-
HTTP 403 பிழை
நீங்கள் உலகலாவிய(WWW) வலையிள் வரம்புக்குட்டாத தடைசெய்யபட்ட ஒரு தளத்தினை அணுக முயற்ச்சித்தால் இப்பிழையை நீங்கள் காணலாம். அந்த வலைதளமானது தரவுத்தளம், Back-end-code அல்லது சேவர் தேவையான செயற்பாடுகள் என்பவற்றை கொண்டு இருந்தாலும் அவற்றை உங்களால் பார்க்க முடியாது.
-
HTTP 400 பிழை
இப்பிழையானது நீங்கள் அடையநினைத்த தளமானது எதாவது ஒரு வழியில் தடைபட்டால் இதை காணலாம். நீங்கள் உட்செலுத்திய இணையமுகவரியை தவறாக இருக்கலாம் அல்லது உங்கள் இணைய இணைப்பில் எதாவது கோலராக இருக்கலாம்.
-
HTTP 401 பிழை
இப்பிழையானது 403 ஒத்த பிழையாகும் ஆனால் வழமையாக உள்நுழைவில்(Login) எதவாது தவறின் மூலம் இப்பிழை தோன்றும்.
No comments yet
Post a comment