Firefox ஊடாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை அனுபவியுங்கள்!

Firefox இணைய உலாவி உங்களது இணைய உலாவல் அனுபவத்தினை நீங்கள் விரும்பியவாறு கட்டுப்படுத்தும் வசதியைத் தருகிறது. இதனை இலகுவாகவும் செய்யலாம். Firefox இல் இருக்கும் தனிப்பயனாக்கல் பட்டியினூடு (customization menu) அதனை உங்களுடையதாக மாற்றிக்கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய எந்தவொரு வசதியையும் சேர்க்கலாம் அல்லது மாற்றலாம், சமூக வலையமைப்புகளூடு இணையும் வசதிகள் அல்லது செருகல்கள் (Add-on) போன்றவற்றைப் பட்டிகளில் சேர்க்கலாம். அத்தோடு கிடைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்ண முகப்புகளைப் (Themes) பயன்படுத்தி உங்களது Firefox இணைய உலாவியினை அழகுவபடுத்துவதனூடாக இணைய உலாவல் அனுபவத்தினை மேம்படுத்தலாம்.
Firefox முதன்முறையாக Facebook, Delicious, Welbo போன்ற தளங்களின் சேவைகளை நேரடியாக உலாவியில் சேர்ப்பதற்கான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் எந்த இணையத்தில் உலாவந்தாலும் Firefox இன் பக்கப் பட்டை, சமூகத் தளங்களிற்கான பகிர்வு வசதிகள், அறிவிப்புப் பொத்தான்கள் என்பவற்றின் உதவியோடு உங்கள் நண்பர்களோடும் உறவினர்களோடும் நீங்கள் விரும்பும் சமூக வலையமைப்பினூடாக இணைந்திருக்கலாம். நீங்கள் இப்போது மிக இலகுவாக தனிப்பயனாக்கக்கூடிய பட்டியிலே புதிய பக்கப் பட்டையில் உள்ள சமூக வலைத்தளங்களுக்குரிய பொத்தான்கள், புத்தகக்குறிகள் மற்றும் வரலாறு ஆகியவற்றை சேர்த்து இலகுவாக அணுகும் வசதி முன்னெப்போதும் இருந்ததில்லை.

The Goal.com sidebar in Firefox for Windows, Mac & Linux

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை Firefox இல் goal.com ஊடாக அனுபவியுங்கள்!

Firefox இல் goal.com என்ற அழகிய தகவல்பொதிந்த பக்கப்பட்டையை அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம். இதன் உதவியுடன் நீங்கள் பிரேசிலில் நடைபெறும் காற்பந்துப் போட்டிகள் தொடர்பான பிந்திய செய்திகளை ஒவ்வொரு நிமிடமும் அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம். இந்த goal.com பக்கப்பட்டையை உங்கள் Firefox இல் இயலுமைப்படுத்துவதன் மூலம் உலகக் கால்பந்துப்போட்டி தொடர்பான முக்கியச் செய்திகள், போட்டிகளின் முடிவுகள் போன்ற  அனைத்து செய்திகளையும் உடனடியாகவே உங்கள் கைக்குள் கொண்டுவரலாம்.
இந்தப் பட்டையின் ஊடாக போட்டியின் அனைத்து படிநிலைகளிலும் போட்டிகள் தொடர்பான  பிந்தைய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களால் அனைத்துப் போட்டிகள் பற்றிய தகவல்களையும் அறியலாம், உங்களுடைய நாட்டைத் தெரிவு செய்வதன் ஊடாக உங்கள் அணி தொடர்பான விபரங்களையும் இலகுவாக தவறாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு ஒரு குறிப்பிட்ட போட்டிக்கு மேல் சொடுக்குவதன் மூலம் goal.com போட்டி மையத்தினைப் புதிய தத்தலில் திறந்துகொள்ளலாம். அதனூடாக போட்டிகளின் முன்னோக்குகள், வீரர்களின் புள்ளிவிபரங்கள், அவர்களுடைய தகுதிநிலை மற்றும் நிமிட அடிப்படையிலான போட்டி வர்ணனைகள் போன்ற பல விடயங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தப் பக்கப்பட்டையை நீங்கள் மிக இலகுவாக வேண்டாதபோது மறைத்துக்கொள்ளலாம். இந்தக் காற்பந்துப்போட்டி முடிந்த பின்னரும்கூட நீங்கள் இந்தப் பட்டையைப் பயன்படுத்தலாம். அதனூடாக, உலகெங்கிலும் இடம்பெறும் முக்கிய காற்பந்துப் போட்டிகள் சம்பந்தமான விடயங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
உலகெங்கிலும் இருந்து 500 இற்கும் மேற்பட்ட விளையாட்டுச் செய்தியாளர்களுடன் தொடர்புகொண்டு செய்திகளை அறிவது அவ்வளவு இலகுவான காரியமாக இருந்ததில்லை. ஆனால் இன்று அச்செய்திகள் 12 இற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இந்த goal.com இல் இருந்து செய்திகள் பெறும் வசதியானது Firefox மற்றும் அன்ரோய்ட் இற்கான Firefox பதிப்பு ஆகியவற்றில் உள்ளன. மிகவிரைவில் இந்த வசதியானது ஆனது Firefox OS இற்குரிய மொபைல் அப் ஆக  Firefox Marketplace இல் கிடைக்கும். Firefox இனை இன்றே நிறுவிக்கொள்ளுங்கள்!

No responses

Post a comment

Post Your Comment